வீட்டில் வைத்து வழிபடும் சிறிய விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

0 4368
பொது இடங்களில் சிலைகள் வைக்கவும், ஊர்வலமாக செல்லவும் விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது - உயர்நீதிமன்றம்

வீடுகளில் வைத்து வழிபடப்படும் விநாயகர் சிலைகளைத் தனிநபர்கள் நீர்நிலைகளில் கரைக்கச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டிப் பொது இடங்களில் சிலைகள் வைக்கவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தமிழக அரசு தடை விதித்தது.

இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு விசாரணையின்போது, தடையைத் தளர்த்த இயலாது எனத் தமிழக அரசு தெரிவித்து விட்டது. விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்படாது எனவும், முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார் எனவும் இந்து முன்னணி, தமிழ்நாடு சிவசேனா ஆகியவை சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து வீடுகளில் வைத்து வழிபடும் களிமண்ணாலான விநாயகர் சிலைகளைத் தனி நபர்களே நீர்நிலைகளில் கரைக்க நீதிபதிகள் அனுமதி அளித்தனர். சென்னையில் மெரினா கடற்கரையைத் தவிரப் பிற நீர்நிலைகளில் சிலைகளைக் கரைக்கலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments