இந்தி நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கில் புதிய திருப்பம்

0 7380
இந்தி நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கில் புதிய திருப்பம்

இந்தி நடிகர் சுசாந்த் சிங் மரண வழக்கில் புதிய திருப்பமாக  அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்திக்கும், மூத்த தயாரிப்பாளர் மகேஷ் பட்டுக்கும் இடையேயான வாட்ஸ் அப் சாட் (WhatsApp chats) விவரங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

மும்பை குடியிருப்பில்  ஜூன் 14ம் தேதி  சுசாந்த் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அதற்கு முன்பு ஜூன் 8ம் தேதி ரியாவும், மகேஸ் பட்டும் சாட் செய்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

அதில் சுசாந்த்துடனான காதலை முறித்து விலகியதை ரியா சூசகமாக தெரிவிப்பதும்,  மகேஸ் பட்டும் சுஷாந்த் சிங்குடன் காதலை முறித்துக் கொண்டதை ஆதரித்து அறிவுரை வழங்கும் உரையாடல்களும் உள்ளன.

இதன் மூலம் ரியா - மகேஷ் பட் இடையிலான உறவு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments