ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சீனப் பயணம்
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர், ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட மூன்று குறிக்கோள்களுடன் சீனப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மக்தூம் ஷா மகமூது குரேசி தென்சீனக் கடலில் உள்ள ஹைனான் தீவுக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் சீன வெளியுறவு அமைச்சர் வாங் இயுடன் பேச்சு நடத்த உள்ளார்.
இருநாட்டு ராணுவ ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது, சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் இரண்டாம் கட்டத்தைச் செயல்படுத்துவது, பாகிஸ்தான் - நேபாளம் இடையே வணிகப் போக்குவரத்துக்கான பாதையை அமைப்பது ஆகியவை குறித்துப் பேச்சு நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
சீன அதிபர் சி ஜின்பிங்கின் பாகிஸ்தான் வருகைக்கான ஏற்பாடுகள் குறித்தும் இந்தப் பேச்சில் விவாதிக்கப்படும் எனக் கூறுப்படுகிறது.
Comments