ஹட்சன் பால் பண்ணையில் வாயு கசிவு - 20 தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி

0 5787
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே ஹட்சன் நிறுவனத்துக்குச் சொந்தமான பால் பண்ணையில் ஏற்பட்ட அம்மோனியம் வாயுக் கசிவில் சிக்கி 20 பேர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே ஹட்சன் நிறுவனத்துக்குச் சொந்தமான பால் பண்ணையில் ஏற்பட்ட அம்மோனியம் வாயுக் கசிவில் சிக்கி 20 பேர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பண்டப்பள்ளியில் இயங்கி வரும் அந்தத் தொழிற்சாலையில் நேற்று இரவு 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நள்ளிரவில் அம்மோனியம் நிரப்பி வைக்கப்பட்டிருந்த சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு, 20 பணியாளர்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி ஏற்பட்டது.

உடனடியாக அவர்கள் சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்களில் இருவருக்கு மூச்சுத் திணறல் அதிகமானதால் மேல் சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தகவல் அறிந்து சித்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற  மாவட்ட ஆட்சியர் பரத் குப்தா, மருத்துவரிடம் சிகிச்சை பெறும் தொழிலாளர்களின் உடல்நிலை பற்றி கேட்டறிந்தார்.

தொழிலாளர்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப்பட்டால் திருப்பதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க உள்ளதாக அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments