ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை, மும்பை அணிகள் இன்று ஐக்கிய அரபு அமீரகம் பயணம்
ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள், சிறப்பு விமானங்கள் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இன்று புறப்படுகின்றன.
அடுத்த மாதம் 19ம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் தொடர், கொரோனா முன்னெச்சரிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட உள்ளது.
இதையடுத்து, அங்கு செல்லும் 8 அணி வீரர்களும் முதற்கட்டமாக 6 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு, 3 கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.
இந்நிலையில், ஒரு வார கால பயிற்சி முகாமிற்கு பிறகு தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி வீரர்கள், சென்னையில் இருந்து இன்று புறப்படுகின்றனர்.
முன்னதாக ராஜஸ்தான், பெங்களூரு மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளின் வீரர்கள் நேற்று சிறப்பு விமானங்கள் மூலம் புறப்பட்டுச் சென்றனர்.
Comments