கிரீன்லாந்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 2019-ல் 586 பில்லியன் டன் எடையிலான பனிக்கட்டி உருகியதாக தகவல்
உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்தாண்டில் மட்டும், 586 பில்லியன் டன் எடையிலான பனிக்கட்டி கரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செயற்கைகோள் உதவியுடன் கிரீன்லாந்தில் மேற்கொண்ட ஆய்வில், பனிக்கட்டிகள் உருகியதன் மூலம் கடந்த ஓராண்டில் மட்டும், உலக அளவில் 1.5 மில்லி மீட்டர் அளவிற்கு கடல் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் பனிக்கட்டிகள் உருகுவது மட்டுமின்றி அதிவேகமாக உருகி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டில் உருகிய பனிக்கட்டிகளை கொண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை மொத்தமாக 4 அடி ஆழம் வரை மறைக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக, கடந்த 2012ம் ஆண்டு அங்கு 511 பில்லியன் டன் எடையிலான பனிக்கட்டி உருகி இருந்தது.
Comments