விமான நிலைய பாதுகாப்பு பணிக்கான கட்டணத்தை உயர்த்த விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு

0 998
விமான நிலைய பாதுகாப்புக்காக பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தை உயர்த்த, விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

விமான நிலைய பாதுகாப்புக்காக பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தை உயர்த்த, விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

நாடு முழுதும் உள்ள விமான நிலையங்களை பாதுகாக்கும் பணிகளுக்கான கட்டணத்தை விமான சேவை நிறுவனங்கள், பயணியரிடம் டிக்கெட் கட்டணத்துடன் வசூலித்து மத்திய அரசுக்கு செலுத்தி வருகின்றன.

இந்நிலையில், உள்நாட்டு விமான போக்குவரத்தில், விமான நிலைய பாதுகாப்பு கட்டணம் 10 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 160 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விமான போக்குவரத்தைப் பொறுத்தவரை 243 ரூபாயாக இருந்த கட்டணம் 366 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு, செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக  விமானப் போக்குவரத்து துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments