குல்பூஷண் ஜாதவுக்கு இந்திய வழக்கறிஞரை அனுமதிக்க வேண்டும் - பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தல்
பாகிஸ்தான் சிறையில் அடைபட்டிருக்கும் இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு இந்திய வழக்கறிஞரை நியமிக்க அனுமதியளிக்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா வலியுறுத்தியுள்ளது.
பலூசிஸ்தான் பகுதியில் வியாபாரம் செய்து வந்த குல்பூஷண் ஜாதவ் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி கைது செய்த பாகிஸ்தான் அரசு அவருக்கு மரண தண்டனை அளித்துள்ளது.
இதற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்ட இந்தியா ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் குல்பூஷண் ஜாதவை இந்திய வழக்கறிஞர் சந்திக்கவும் அவருடைய வழக்கில் வாதாடவும் பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்க இந்தியா வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச நீதிமன்றம் அளித்த உத்தரவை மதித்து நடக்குமாறும் இந்தியா பாகிஸ்தானை வலியுறுத்தி வருகிறது.
Comments