நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு சிபிஐ மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணை
நடிகர் சுஷாந்த் சிங் மரணம் வழக்கு தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டதையடுத்து மூன்று தனிப்படைகளை சிபிஐ அமைத்துள்ளது.
நேற்று மும்பைக்கு சிபிஐ அதிகாரிகள் வந்து சேர்ந்தனர்.
வழக்கமாக வெளியூரில் இருந்து வருபவர்கள் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்படுவார்கள். ஆனால் சிபிஐ அதிகாரிகளைத் தனிமைப்படுத்த வேண்டாம் என்று மகாராஷ்ட்ரா அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் அதிகாரிகள் தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சுஷாந்தின் வீட்டை சோதனையிடவும் அவருடைய முன்னாள் காதலியான ரியா சக்ரபோர்த்தியை விசாரிக்கவும் சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
ரியா சுஷாந்த் நட்பு முறிந்தது ஏன் என்றும் சுஷாந்த்துக்கு எதிராக திரையுலகின் பெரும் புள்ளிகள் மற்றும் நிழல் உலக தாதாக்கள் இருந்தனரா என்றும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
இதனிடையே சுஷாந்த்தை வைத்துப் படம் எடுக்க பெருந்தொகையை கொடுத்த இயக்குனர் ரூமி ஜாப்ரியை நேற்று அமலாக்கத்துறையினர் பலமணி நேரம் விசாரணை நடத்தினர்.
A team of Central Bureau of Investigation (CBI) arrived in Mumbai yesterday to investigate #SushantSinghRajput case. Visuals from outside CBI office. pic.twitter.com/6wnvpisK2z
— ANI (@ANI) August 21, 2020
Comments