ஆந்திராவில் வெள்ளம் பாதித்த குடும்பங்களுக்கு தலா ரூ.2ஆயிரம் நிவாரணம்-ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திராவில் பெய்யும் தொடர்மழை காரணமாக கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
70க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளப்பாதிப்பு விவரங்களை மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஹெலிகாப்டரில் பார்வையிட்ட நிலையில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
மேலும் விநாயகர் சதுர்த்திக்காக பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும் அவர் தடை விதித்துள்ளார்.
Comments