அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு தாமதம் - மாணவர்கள் தவிப்பு

0 1710
கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை அறிவிப்பது தாமதம் ஆகியுள்ளதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை அறிவிப்பது தாமதம் ஆகியுள்ளதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின்கீழ் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 92 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்கள் உள்ளன. நடப்பாண்டு கலை, அறிவியல் படிப்புகளில் சேர இணையவழியில் 3 லட்சத்து 12 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

2 லட்சத்து ஆறாயிரம் மாணவர்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றியுள்ளனர். விண்ணப்பப் பதிவு முடிந்து 20 நாட்களான பின்பும் அரசு கல்லூரிகளுக்கான கலந்தாய்வு அறிவிப்பை உயர்கல்வித்துறை வெளியிடாததால் அடுத்தகட்ட முடிவை எடுக்க முடியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

இதனால் அரசு கல்லூரிகளில் விரும்பும் பாடப்பிரிவு கிடைக்குமா என்கிற குழப்பத்தில் தனியார் கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments