IPL கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணியினர் ஐ.அ.அமீரகம் பயணம்

0 2372
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளில், கலந்து கொள்வதற்காக ராஜஸ்தான் அணியினர் உடல் பாதுகாப்பு கவசத்துடன் புறப்பட்டு சென்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளில், கலந்து கொள்வதற்காக ராஜஸ்தான் அணியினர் உடல் பாதுகாப்பு கவசத்துடன் புறப்பட்டு சென்றனர்.

13 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி 53 நாட்கள் நடைபெற இருக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணியினர் இன்று விமானங்களில் புறப்பட்டனர்.

கொரோனா தொற்று பரவலில் இருந்து காக்கும் விதமாக ராஜஸ்தான் அணியினர், உடல் பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து சென்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் நாளை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்பட இருக்கின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments