சித்த மருத்துவத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு நடத்துவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி
சித்த மருத்துவத்தை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக மத்திய அரசு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் ஆயுர்வேதா துறைக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சித்த மருத்துவ துறைக்கு 437 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையை படித்த நீதிபதிகள், மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வது ஏன் எனவும், சித்த மருத்துவத்துக்கு, பிற மருத்துவ துறைகளை விட குறைந்த நிதி ஒதுக்கியுள்ளது துரதிருஷ்டவசமானது என்றும் அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும், ஆயுஷ் அமைச்சகத்தின் பெயரில் இருந்து, சித்த மருத்துவத்தை குறிப்பிடும் 'எஸ்' என்ற எழுத்தை நீக்கிவிடலாம் என கண்டனம் தெரிவித்தனர்.
Comments