தொடர்ந்து 4 ஆவது ஆண்டாக இந்தியாவின் மிக தூய்மையான நகரமாக இந்தூர் தேர்வு
தொடர்ந்து 4 ஆவது ஆண்டாக இந்தியாவின் மிக தூய்மையான நகரமாக மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் தூய்மை நகரங்கள் குறித்த ஆய்வில் இந்தூர் முதலிடத்தையும், சூரத், நவி மும்பை ஆகியன முறையே இரண்டு மற்றும் 3 ஆம் இடங்களையும் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டுவிட்டரில் இந்தூர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மத்திய நகர்ப்புற அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, நகரை தூய்மையாக வைப்பதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதாக பாராட்டியுள்ளார்.
இந்த பட்டியலில் கோவை 40 ஆவது இடத்தையும், மதுரை 42 ஆவது இடத்தையும், சென்னை 45 ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.
சிறந்த கங்கை கரை நகரமாக வாரணாசி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Comments