தி.மு.க. முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் மாரடைப்பால் இன்று உயிரிழப்பு
தி.மு.க முன்னாள் அமைச்சரும் , அக்கட்சியின் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான ரகுமான்கான் கொரோனா சிகிச்சையிலிருந்து 3 தினங்களுக்கு முன் வீடு திரும்பிய நிலையில் மாரடைப்பால் காலமானார்.
அவர் மறைவைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த ரகுமான்கான் உருவப்படத்துக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் துக்கம் அனுசரிக்கும் வகையில் கட்சி நிகழ்வுகள் 3நாள் ரத்து செய்யப்படுவதாகவும், கட்சிக் கொடிகள் 3 நாள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
திமுகவின் அதிரடி பேச்சாளர் என்று அறியப்பட்ட ரகுமான்கான், தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளனர்.
கழகத்தின் இடி முழக்கம், மாணவப் பருவத்திலேயே போர்ப்பரணி பாடிய அண்ணன் ரகுமான்கானை இழந்து தவிக்கிறேன். அவர் தந்த ஆலோசனைகள் அட்சயபாத்திரம். அவரது மூச்சு நின்றாலும் அவரின் எழுத்தும், பேச்சும் என்றும் நம் கண்களிலேயே நிற்கும்!
— M.K.Stalin (@mkstalin) August 20, 2020
அண்ணனின் மறைவிற்கு கனத்த இதயத்துடன் என் ஆழ்ந்த இரங்கல். pic.twitter.com/FAXYhXWz2e
Comments