இந்தியாவில் இருந்து வெளியேற ஹார்லி-டேவிட்சன் முடிவு
விற்பனை நலிவு, எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மை ஆகிய காரணங்களால் இந்தியாவில் இருந்து வெளியேற, பிரபல அமெரிக்க பைக் தயாரிப்பாளரான ஹார்லி-டேவிட்சன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வெளியேறுவதற்கு முனபாக, அரியானாவில் உள்ள பாவல் தொழிற்சாலையில் பைக் அசெம்பிள் செய்யும் பணியை வேறு சில வாகன தயாரிப்பாளர்களிடம் ஒப்படைக்க ஹார்லி-டேவிட்சன் முயற்சிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் தனது உற்பத்தியை நிறுத்தினாலும், வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தெற்காசியா உள்ளிட்ட சுமார் 50 நாடுகளில் தனது விற்பனையை முடுக்கி விட அது தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. முதலீட்டுக்கு ஏற்றவாறு விற்பனையும் லாபமும் இல்லாத சர்வதேச சந்தைகளில் இருந்து வெளியேற உள்ளதாக ஹார்லி-டேவிட்சன் கடந்த மாதமே அறிவித்தது.
Comments