பறவைகள் சரணாலயத்தில் ஏற்பட்ட தீயில் மாயமான நீலநிற மக்காவ் கிளிகள்
பிரேசில் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் அரியவை நீலநிற மக்காவ் கிளிகளின் வாழிடம் அழிக்கப்பட்டது.
மாட்டோ கிராஸோ மாநிலத்தில் 61 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் அரியவகை நீலநிற மக்காவ் கிளிகள் வளர்க்கப்பட்டு வந்தன.
பிரேசில் நாட்டில் மட்டுமே காணப்படும் இந்தவகை கிளிகளில் சுமார் 700 முதல் 1000 வரை இங்கு வளர்க்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் இங்கு ஏற்பட்ட பெருந்தீயின் விளைவாக கிளிகளின் நிலை என்னவென்று தெரியவில்லை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளன.
ஆனாலும் பெருநெருப்பின் காரணமாக ஏராளமான மரங்களும், தாவரங்களும் அழிந்து போயின. இதில் நீலநிற மக்காவ் கிளிகள் உண்ணும் சில வகை பழங்களும், கொட்டைகளும் நிறைந்த மரங்களும் அடக்கம் என்பதால் வரும் காலத்தில் அந்தப் பறவைகளை பாதுகாப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
Comments