புதியவகை அதிநவீன ஏவுகணையை தயாரித்துள்ளதாக சீனா அறிவிப்பு
இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் புதியவகை ஏவுகணை ஒன்றை சீனா தயாரித்துள்ளது.
சீன மொழியில் தியான் லி அல்லது ஆங்கிலத்தில் ஸ்கை தண்டர் என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணையை அந்நாட்டு ராணுவத்திற்கான மிகவும் மேம்பட்ட தயாரிப்பு என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சீன ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரேடாரின் கண்களில் சிக்காமல் செல்லும் ஸ்கை தண்டர் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் பல்நோக்கு செயல்பாட்டு ஆயுதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் விமானங்கள் முதல் டேங்குகள் வரை தகர்க்கக் கூடிய 6 வகையான வெடிபொருட்களை எடுத்துச் செல்ல முடியும் என்றும், 6 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள நிலத்தையோ கட்டடத்தையோ தகர்க்கும் வல்லமை ஸ்கை தண்டருக்கு உண்டு என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எந்தக் காலநிலையிலும் பல்வேறு தரையிலக்குகளையும் தாக்கும் வல்லமை இந்த ஏவுகணைக்கு உள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
Comments