முடிவுக்கு வராத வன்மம்... ரவுடி துரைமுத்துவின் உடல் அரிவாள் வைத்து புதைப்பு!

0 16614

தூத்துக்குடி மாவட்டத்தில் வல்லாநாடு மலையில் பதுங்கியிருந்த ரவுடி துரைமுத்துவை பிடிக்கும் முயற்சியின் போது அவர் வீசிய வெடிகுண்டு வெடித்ததில் காவலர் சுப்ரமணியம் தலை சிதறி இறந்து போனார். அதேபோல், ரவுடி துரைமுத்துவும் அதே வெடிகுண்டுக்கு பலியானார்.

பலியான காவலர் சுப்பரமணியத்தின் உடல் அவரின் சொந்த ஊரான பண்டாரவிளையில் நேற்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக காவலர் சுப்பிரமணியன் உருவப்படத்துக்கு திருநெல்வேலி சரக டிஐஜி அலுவலகத்தில் தமிழக டிஜிபி திரிபாதி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிறகு காவலர் சுப்ரமணியத்தின் சொந்த ஊரான பண்டார விளைக்கு சென்ற அவர் காவலர் சுப்பிரமணியத்தின் குடும்பத்துக்கு ஆறுதல் சொன்னார். காவலர் சுப்ரமணியம் அடக்கத்தின் போது,  உடலை டிஜிபி திரிபாதி, தென் மண்டல ஐஜி முருகன், டிஐஜி பிரவின் குமார் அபினவ், தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார், திருநெல்வேலி எஸ்.பி மணிவண்ணன் ஆகியோர் தோலில் சுமந்தபடி எடுத்து சென்றனர். பின்னர் காவலர் சுப்ரமணியத்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, அவரின் மனைவி கைக்குழந்தையுடன் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

பலியான துரைமுத்து இரட்டை கொலை உட்பட பல கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர். தனது சகோதரர் கண்ணணை கொன்றவரை பழி வாங்கும் எண்ணத்துடன் தன் கூட்டாளிகளுடன் வல்லநாடு மலையில் பதுங்கியிருந்த அவரை போலீஸார் பிடிக்கும் முயற்சியில்தான் காவலர் சுப்ரமணியம் இறந்தார். இந்த நிலையில், ரவுடி துரைமுத்துவின் உடலும் உடற் கூறு ஆய்வுக்கு பிறகு அவரின் குடும்பத்தாரிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. ரவுடி துரைமுத்து மஙகலகுறிச்சி என்ற கிராமத்தை சேர்ந்தவர். அவரின் உடல் அடக்கத்தில் அந்த கிராமத்தை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். ரவுடி துரைமுத்துவின் உடலை எடுத்து சென்ற வாகனத்தின் முன்னாலும் பின்னாலும் கோஷமிட்டவாறு சென்றனர். முடிவில் துரைமுத்துவின் உடல் மீது இரண்டரை அடி நீள அரிவாளை வைத்து அடக்கம் செய்ததுதான் கொடூரத்தின் உச்சமாக இருந்தது.

தற்போது, இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments