இருமல்,சளி போன்ற உடல் நல பாதிப்புகளைப் போக்க 'தேன்' சிறந்த மருந்து என ஆய்வில் உறுதி

0 15678

இருமல்,சளி போன்ற உடல் நல பாதிப்புகளைப் போக்க தேன் சிறந்த மருந்தாக இருப்பதாக புதிய ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

ஃப்ளூ தொடர்புடைய இருமல் சளி போன்ற உபாதைகளுக்கு எளிதாகக் கிடைக்கக்கூடிய, மலிவான சிகிச்சையாக தேன் இருப்பதாகவும் , ஆன்டிபயோடிக் மருந்துகளுக்கு இயற்கையான சிறந்த மாற்றாக விளங்குவதாகவும் அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளுக்கு தேனை மருந்தாக பரிந்துரைக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். நீண்ட காலமாக வீட்டு வைத்தியமாகப் பயன்படுத்தப்படும் தேன் குறித்து ஏனோ விரிவான ஆய்வுகள் நடத்தப்படவில்லை. இப்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப் பிரிவினர் தேன் மிகச்சிறந்த நிவாரணியாக இருப்பதாக சான்று அளித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments