எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

0 18538
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் உடல்நிலை எட்டாவது நாளாக செயற்கை சுவாசம்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் உடல்நிலை எட்டாவது நாளாக செயற்கை சுவாசம் மூலம் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் உயிருக்குப் போராடி வரும் எஸ்.பி.பிக்கு வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு திரையுலகினர் அவரவர் இடத்தில் இருந்தபடியே எஸ்.பி.பியின் பாடலை ஒலிக்க விட்டு கூட்டுப் பிரார்த்தனை செய்து எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.

கமல், ரஜினி உள்ளிட்டோரும் கலந்துக் கொள்ள இயக்குனர் பாரதிராஜா அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டுப் பிரார்த்தனையில் அனைவரும் பங்கேற்குமாறு இளையராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments