இந்தியாவின் நடப்பாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி மேலும் குறையலாம்
இந்தியாவின் நடப்பாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை, மேலும் குறைக்க வேண்டியதிருக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிக்கையில், தொடரும் கொரோனா தொற்று பரவல், நிதித்துறையில் கூடுதல் நெருக்கடி என பல சவால்கள் காரணமாக, நாட்டின் வளர்ச்சியில் மேலும் கடுமையான சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதிப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.6 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், தொற்றுநோய் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சுகாதாரம், தொழிலாளர், நிலம், திறன் மற்றும் நிதி போன்ற துறைகளில், இந்தியா தொடர்ந்து முக்கியமான சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
.#India needs to implement critical reforms to come out stronger from the impact of the #COVID19 pandemic. What are those reforms that India needs to prioritize? Read our latest India Development Update to know more. https://t.co/aHG4MGUHYG pic.twitter.com/JsQgfmbhOv
— World Bank India (@WorldBankIndia) August 19, 2020
Comments