மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு : உயிரிழப்பு மேலும் உயரும் அபாயம்
கேரள மாநிலம் மூணாறு அருகே ராஜமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 9 வயது சிறுவனின் உடல் மீட்கப்பட்ட தால், உயிரிழப்பு 62 ஆக உயர்ந்துள்ளது.
பெட்டி முடி என்ற இடத்தில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்த குடியிருப்பு, கடந்த 7 ஆம் தேதி நிகழ்ந்த நிலச் சரிவில் மண்ணுக்குள் புதைந்தது. இந்த சம்பவத்தில் 11 பேர் மட்டுமே பத்திரமாக மீட்கப்பட, உயிரு டன் மண்ணுக்குள் புதையுண்டவர்களில் இதுவரை 61 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.
நீடித்து வந்த தேடுதல் பணியில் இன்று, 9 வயது சிறுவனின் உடல் கிடைத்தது. இதற்கிடையே, நிலச்சரிவில் சிக்கியவர்களில் மேலும் 9 பேரின் நிலைமை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே, இடுக்கி நிலச்சரிவு உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Comments