இந்திய-சீன எல்லைக்கு அருகே சீனாவின் நவீன ஜே-20 போர் விமானங்கள்

0 15909
சீனாவின் மிகவும் நவீன போர் விமானமான ஜே-20 ஐ இந்திய-சீன எல்லைக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளதை, இரு நாட்டு எல்லைப் பிரச்சனையுடன் தொடர்புள்ளதாக கருத வேண்டாம் என சீன அரசு பத்திரிகையான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்திய சீன எல்லையில் இரண்டு ஜே-20 போர் விமானங்கள் இருப்பதற்கான சாட்டிலைட் படங்களை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டது.  எல்லையில் இருந்து சுமார் 320 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சீனாவின் ஹோட்டன் விமான நிலையத்தில் இந்த விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது.

சீனாவின் நான்காம் தலைமுறை போர் விமானமான ஜே-20, நீண்ட தூரம் பறக்கும் திறன் வாய்ந்தவையாகும். நீண்ட தூரம் பறந்து பயிற்சி செய்வதுடன்  வெவ்வேறு சூழ்நிலைகளில் அதன் இயக்கத்தை சோதித்துப் பார்க்கவும் இந்த போர் விமானங்கள் வந்துள்ளதாக குளோபல் டைம்ஸ் விளக்கம் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments