இந்தாண்டே ஓ.பி.சி மாணவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் - மு.க. ஸ்டாலின்
மருத்துவக் கல்வி இடங்களுக்கு உயர்நீதிமன்றம் அளித்த 50 சதவீத இடஒதுக்கீட்டு உரிமையை உடனே பெற, தமிழக அரசு குழப்பம் விளைவிக்காமல் வெளிப் படைத்தன்மையுடன் செயல்பட வேண்டுமென திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
OBC மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை இறுதி செய்ய அமைக்கப்பட்ட குழு உறுப்பினராக, தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.உமாநாத் நியமனம் செய்யப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், குழு உறுப்பினராக சுகாதாரத்துறை செயலாளரை ஏன் நியமிக்க வில்லை? என கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்த பிரச்சினையில், இந்தாண்டே 50 சதவீத இடஒதுக் கீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
Comments