எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம் என மருத்துவமனை நிர்வாகம் தகவல்
கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக சிகிச்சையளித்து வரும் எம்.ஜி.எம். மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பி.க்கு, வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும், மருத்துவ வல்லுநர் குழு தொடர்ந்து எஸ்.பி.பி. உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments