கொப்பரை தேங்காய் விலையை உயர்த்தி தரக் கோரி மத்திய அரசுக்கு முதலமைச்சர் கோரிக்கை
கொப்பரைத் தேங்காய், ஒரு கிலோவுக்கு 99 ரூபாய் 60 காசு என நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச ஆதார விலையை 125 ரூபாயாக உயர்த்தி தருமாறு, மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொப்பரைத் தேங்காய் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், கொரோனா ஊரடங்கு காலத் திலும், இத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் சிரமத்தை சந்தித்து வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு உள்ளார்.
இந்தியாவிலேயே தேங்காய் உற்பத்தியில் முன்னணி மாநிலமாக திகழும் தமிழகத்தில் 4 புள்ளி 40 லட்சம் ஹெக் டேரில் தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
எனவே, தென்னை விவசாயிகளின் நலனை பாதுகாக்க, 2020 ம் ஆண்டுக்கான குறைந்த பட்ச ஆதாரவிலையை உயர்த்தி நிர்ணயிக்குமாறு, கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
கொப்பரை தேங்காய் விலையை உயர்த்தி தரக் கோரி மத்திய அரசுக்கு முதலமைச்சர் கோரிக்கை #TNGovt | #CentralGovt | #CMEdappadipalaniswami https://t.co/PiFFSfpu9G
— Polimer News (@polimernews) August 19, 2020
Comments