நாட்டிலேயே முதல் முறையாக சென்னையில் கொரோனா தொடர் கண்காணிப்பு மையம்

0 1720
இந்தியாவிலேயே முதல்முறையாக கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்காக, சென்னையில் கொரோனா தொடர் கண்காணிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதல்முறையாக கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்காக, சென்னையில் கொரோனா தொடர் கண்காணிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

அதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

கொரோனோ தொற்றால் பாதிக்கப்படுவோர் குணமடைந்த பின்னரும், நிமோனியா, இருதய பிரச்சனை, சிறுநீரகங்கள், கல்லீரல் ,ரத்த நாளங்கள் மற்றும் மூளை நரம்பியல் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளும் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் நாட்டிலேயே முதன்முறையாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள கொரோனா தொடர் கண்காணிப்பு மையத்தை தொடங்கி வைத்த பின், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஐசியூவில் சிகிச்சை பெற்றவர்கள் இந்த மையத்தில் பரிசோதனை செய்யலாம் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments