EIA வரைவு அறிக்கைக்கு தடை இருப்பதால் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்
சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நடந்த விசாரணையில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், சுற்றுசூழல் தாக்க வரைவு அறிக்கையை அனைத்து மாநில மொழிகளிலும் வெளியிட வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
வரைவு அறிக்கைக்கு பிற உயர் நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். டெல்லி உயர் நீதிமன்ற தடைக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளதால், இது குறித்து பதிலளிக்க கூடுதல் அவகாசம் தேவை என அவர் கேட்டுக் கொண்டார். அதை அடுத்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் 8 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
Comments