கடற்படை கமாண்டர்களின் மூன்று நாள் மாநாடு தொடங்கியது
இன்று முதல் வரும் 21 ஆம் தேதி வரை டெல்லியில் நடக்கும் கடற்படை கமாண்டர்களின் மாநாட்டை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் துவக்கி வைத்தார்.
அதற்காக டெல்லி சேனா பவனில் உள்ள கடற்படை தலைமையகத்திற்கு வந்த ராஜ்நாத் சிங்கை, கடற்படை தளபதி காராம்பீர் சிங் வரவேற்றார். கடற்படை கமாண்டர்களை அவர் அமைச்சருக்கு அறிமுகப்படுத்தினார்.
கொரோனா கட்டுப்பாடு குறித்து கடற்படை எடுத்துள்ள நடவடிக்கைகள், வெளிநாட்டு இந்தியர்களை கடற்படை கப்பல்கள் வாயிலாக மீட்கும் சமுத்திர சேது,மிஷன் சாகர் ஆகிய திட்டங்கள் குறித்தும் ராஜ்நாத் சிங்கிடம் எடுத்துரைக்கப்பட்டது.
Delhi: Defence Minister Rajnath Singh arrives at Naval headquarters in Sena Bhavan, to address the opening session of Naval Commanders' Conference pic.twitter.com/lM9dD4qxwd
— ANI (@ANI) August 19, 2020
Comments