ஒகேனக்கலில் விநாடிக்கு 21ஆயிரம் கனஅடி நீர் வருகை

0 1390
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் காவிரியில் நீர்வரத்து 21 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் காவிரியில் நீர்வரத்து 21 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

நேற்றுப் பத்தாயிரம் கனஅடியாக இருந்தது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 97 புள்ளி ஒன்பது கன அடியாகவும், நீர் இருப்பு 62 புள்ளி 2 டிஎம்சியாகவும் இருந்தது.

அணைக்கு நீர்வரத்து நேற்று 11 ஆயிரத்து 441 கனஅடியாக இருந்தது இன்று ஏழாயிரத்து 79 கன அடியாகக் குறைந்துள்ளது.

அணையில் இருந்து காவிரியாற்றில் நொடிக்கு 16 ஆயிரத்து ஐந்நூறு கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய்களின் பாசனத்துக்கு 500 கன அடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments