'அழகிய கடற்கரை தீவு அலங்கோலமானது' - ஜப்பான் கப்பலின் இந்திய கேப்டனை மொரிஸியஸ் கைது செய்தது

0 4022

மொரிஸியஸ் கடல் பகுதியில் ஜப்பானைச் சேர்ந்த எண்ணெய்க் கப்பல் விபத்துக்குள்ளானதில், கப்பலிலிருந்து எண்ணெய் கடலில் கலந்தது. இதனால், சுற்றுச்சூழல் பெரும் ஆபத்தை விளைவித்ததாக கப்பலின் கேப்டனான இந்தியாவை சேர்ந்த சுனில் குமார் நந்தேஷ்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானைச் சேர்ந்த நாகாஷாகி ஷிப்பிங் நிறுவனத்துக்குச் சொந்தமான வாகாஷியோ (Wakashio )என்ற கப்பல் கடந்த ஜூலை மாதம் 25- ஆம் தேதி மொரிஷியஸ் கடல் பகுதியில் விபத்துக்குள்ளானது. மொரிஷியஸ் நாட்டின் மிக அழகிய கடற்கரையை கொண்ட Mahebourg Lagoon என்ற தீவுக்கருகே இந்த விபத்து நிகழ்ந்தது. வாகாஷியோ கப்பலில் 4,000 டன் எண்ணெய் இருந்தது. பொதுவாக, கடற்கரை பகுதியிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில்தான் சரக்குக் கப்பல்கள் பயணிக்க வேண்டும். ஆனால், இந்த கப்பல் Mahebourg Lagoon தீவுக்கருகே ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் நெருங்கி வந்து விபத்தில் சிக்கியிருக்கிறது. பேரலை ஒன்றில் கப்பல் சிக்கி இழுத்து வரப்பட்டதாக சொல்லப்படுகிறது. விபத்து காரணமாக கப்பலிலிருந்த எண்ணெய் லீக் ஆக தொடங்கியது.

இதனால், வாகாஷியோ கப்பலிலிருந்த எண்ணெயை வேறு கப்பல்களுக்கு மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சுமார், 3,000 டன் எண்ணெய் மாற்றப்பட்ட நிலையில் கடந்த ஆகஸ்ட் 6- ஆம் தேதி கப்பல் இரண்டு துண்டாக உடைந்தது. கப்பலில் எஞ்சியிருந்த 1000 டன் எண்ணெய் Mahebourg Lagoon தீவின் கடலில் கலந்தது. இதனால், மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் பாதி க்கப்பட்டதோடு, அழகிய Mahebourg Lagoon தீவின் கடற்கரை அலங்கோலமானது. கடகில் கலந்த எண்ணெயை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்கா, இந்தியா , ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் எண்ணெயை அப்புறப்படுத்த மொரிஷியஸ் நாட்டுக்கு உதவி வருகின்றன. ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்கள் எண்ணையை அப்புறப்படுத்தும் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர்.

இதற்கிடையே, எம்.வி.வகாஷியோ கப்பலின் கேப்டனான, இந்தியாவைச் சேர்ந்த சுனில் குமார் நந்தேஷ்வரை மொரிஷியஸ் போலீஸ் கைது செய்துள்ளது. பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆபத்தை விளைவித்தாகவும் கப்பலை பாதுகாப்பாக வழி நடத்த தவறியதாகவும் கப்பல் கேப்டன் சுனில் குமார் நந்தேஷ்வர், மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கப்பலின் உரிமையாளரான நாகாஷாகி கப்பல் நிறுவனத்திடம் நஷ்ட ஈடு கேட்கவும் மொரிஷியஸ் அரசு முடிவு செய்துள்ளது. மொரிஸியஸ் நாட்டில் சற்றுச்சூழல் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments