"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
மொரீஷியஸ் கடற்பகுதியில் இரண்டாக உடைந்த ஜப்பான் சரக்கு கப்பலின் இந்திய கேப்டன் கைது
மொரீஷியஸ் கடற்பகுதியில் பவளப்பாறைகளில் மோதி இரண்டாக உடைந்த ஜப்பான் சரக்கு கப்பலின் இந்திய கேப்டனை மொரீஷியஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சிங்கப்பூரில் இருந்து பிரேசிலுக்கு சென்று கொண்டிருந்த இந்த சரக்கு கப்பல் எந்த அவசியமும் இன்றி மொரீஷியஸ் கடற்பகுதிக்கு ஏன் வந்தது என்பது குறித்த விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கப்பல் உடைந்து சுமார் ஆயிரம் டன் எண்ணெய் கடலில் கலந்ததால், சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ளதுடன், ஹனிமூன் ஸ்பாட்டாக புகழ்பெற்ற மொரீஷியஸ், தனது சுற்றுலா வருமானம் பாதிக்கும் என்ற கவலையில் உள்ளது.
கப்பல் கேப்டன் சுனில் குமார் நந்தேஷ்வருடன், இலங்கையை சேர்ந்த துணை கேப்டனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
Comments