இந்திரா காந்தி குடும்பத்தை சேராதவர் காங்.தலைவராக வர வேண்டும் - பிரியங்கா
இந்திரா காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக வர வேண்டும் என அதன் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விருப்பம் தெரிவித்துள்ளார். இதே விருப்பத்தை வெளியிட்டுள்ள ராகுல் காந்தியின் கருத்தோடு தாம் ஒத்துப் போவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
அடுத்த தலைமுறை தலைவர்கள் குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் இவ்வாறு கூறினார். பாஜக உடனான அரசியல் போட்டியில் காங்கிரஸ் பின்னுக்குத் தள்ளப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், புதிய ஊடக உத்திகளை உடனடியாக கையாளுவதில் காங்கிரசுக்கு திறன் போதாது என்றார். அதை புரிந்து கொள்வதற்குள் கட்சிக்கு கெட்ட பெயர் வந்து விடுகிறது என்றும் அவர் கூறினார்.
Comments