பெண் பத்திரிக்கையாளர் மீது பேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாக ஒருவர் மீது வழக்குப்பதிவு

0 850

சென்னையில் பெண் பத்திரிக்கையாளர் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக ஒருவர் மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முருக வழிபாடு தொடர்பாக பேஸ்புக்கில் பதிவிட்டிருந்த பெண் பத்திரிக்கையாளரின் புகைப்படத்தில், சசிகுமார் என்ற நபர் அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வெளியிட்டதாக வேப்பேரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த நபர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, தன் மீதான அவதூறு கருத்துக்களை நீக்குமாறு பத்திரிக்கையாளர் வைத்த கோரிக்கையை மறுத்த பேஸ்புக் நிறுவனத்திற்கு, கண்டனங்கள் எழுந்த நிலையில் குறிப்பிட்ட கருத்துக்கள் பேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments