மாலி நாட்டில் ராணுவப் புரட்சி - அதிபர், பிரதமர் சிறைபிடிப்பு..!
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஆட்சியை ராணுவ கிளர்ச்சியாளர்கள் (mutinying soldiers) கைப்பற்றியுள்ளனர்.
துப்பாக்கி முனையில் அதிபர் இப்ராஹிம் போபாசார் கெய்டாவையும் (Ibrahim Boubacar Keita), பிரதமர் போபோ சிசியையும் (Boubou Cisse) அவர்கள் சிறை பிடித்ததாகவும், கேட்டி (Kati) எனுமிடத்திலுள்ள ராணுவ தளத்துக்கு இருவரும் கொண்டு செல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய அதிபர் கெய்டா தனது பதவியை ராஜிநாமா செய்து விட்டதாகவும், நாடாளுமன்றம் மற்றும் அரசை கலைத்து விட்டதாகவும் தெரிவித்தார்.
கிளர்ச்சியில் ஈடுபட்ட ராணுவத்தினருக்கு தலைமை வகித்தது யார்? அடுத்து ஆட்சிக்கு தலைமை வகிக்க போவது யார் ? என்பது குறித்து தகவல் இல்லை. இதனிடையே அதிபரையும், பிரதமரையும் உடனடியாக நிபந்தனையின்றி கிளர்ச்சியாளர்களை விடுவிக்க வேண்டுமென ஐநா பொது செயலாளர் குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
Comments