நுரையீரல் புற்றுநோய் காரணமாக நடிகர் சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி
நுரையீரல் புற்றுநோய் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத் நேற்று மும்பையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தமது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களை சந்தித்து கண்ணீர் மல்க விடை பெற்ற அவர் தாம் நலம் பெற பிரார்த்தனை செய்யுமாறு உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
லாக் டவுன் காரணமாக இந்தியா வர முடியாமல் சிக்கித் தவித்து அண்மையில் சிறப்பு விமானம் மூலம் துபாயில் இருந்து திரும்பி வந்த தமது மனைவி மான்யத்தாவை அன்புடன் அணைத்துக் கொண்ட அவர் சகோதரிகளிடமிருந்தும் மிகுந்த துயரத்துடன் விடை பெற்றார்.
சஞ்சய் தத்தின் உடல்நிலை பற்றிய வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் மருத்துவர்களிடம் அவரை ஒப்படைத்து அவர் நலம் பெற காத்திருப்போம் என்றும் மான்யத்தா விடுத்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Comments