இபாஸ் தளர்வால் சென்னைக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

0 2387

E பாஸ் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி விண்ணப்பித்த அனைவருக்கும் இபாஸ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டதையடுத்து சென்னை நகருக்குள் வரும் வாகனங்களின் எண்ணிக்கை மூன்றாவது நாளாக அதிகரித்துள்ளது.

ஆதார் கார்டு, குடும்ப அட்டை போன்றவற்றை காட்டி இ பாஸ் முறை பெறுவது எளிதாக்கப்பட்டதால் பல்லாயிரக்கணக்கானோர் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லுகின்றனர். கடந்த திங்கட்கிழமை மட்டும் சுமார் 14 ஆயிரத்துக்கும் அதிகமான இபாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து சென்று திரும்பி வருகிறவர்களும் இதர மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருகிறவர்களும் கொரோனா தொற்று உடையவர்களாக இருப்பின் அவர்களுக்கான 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்துதல் விதிகளில் எந்த விதத் தளர்வும் அளிக்கப்படாது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments