குஜராத்தில் 70க்கும் மேற்பட்ட தளங்களுடன் மிகப்பெரிய கட்டிடங்கள் கட்ட ஒப்புதல்

0 2005

குஜராத் மாநிலத்தில் 70 தளங்களுக்கும் கூடுதலான தளங்களுடன் பெரிய கட்டிடங்களை கட்டுவதற்கு அந்த மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது குஜராத்தில் உள்ள விதிகள்படி, 23 தளங்களை கொண்ட கட்டிடங்களையே கட்ட முடியும்.

இந்நிலையில் அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், காந்திநகர் ஆகிய 5 முக்கிய நகரங்களில் 70 தளங்களுக்கும் அதிகமான தளங்களுடன் கட்டிடங்களை கட்டும் வகையில் பொது மேம்பாட்டு கட்டுப்பாட்டு வரைமுறைகளை திருத்தம் செய்ய மாநில அரசு முடிவு செய்தது.

இதற்கு குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியும் தனது ஒப்புதலை அளித்து விட்டதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. புதிய விதிகளில், 100 முதல் 150 மீட்டர் உயர கட்டிடம் எனில் நில அளவு 2,500 சதுர மீட்டராகவும், 150 மீட்டர் உயர கட்டிடம் எனில் 3,500 சதுர மீட்டராகவும் இருக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments