தேர்தல் ஆணையர் அசோக் லாவாசா ராஜினாமா

0 1851

பணி மூப்பு அடிப்படையில் அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக வருவார் என கருதப்பட்ட தேர்தல் ஆணையர் அசோக் லாவாசா தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அடுத்த மாதம் அவர் பிலிப்பைன்சில் உள்ள ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக பொறுப்பு ஏற்பார் என கூறப்படுகிறது. தமது ராஜினாமா கடித த்தை குடியரசுத் தலைவரிடம் அளித்த அசோக் லாவாசா தம்மை வரும் 31 ஆம் தேதிக்குள் விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

அசோக் லாவாசா துணைத் தலைவராக நியமிக்கப்பட்டதை கடந்த மாதம் 15 ஆம் தேதி ஆசிய வளர்ச்சி வங்கி அறிவித்தது. வரும் 2022 அக்டோபர் மாதம் வரை அவருக்கு பதவிக்காலம் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments