சவூதி வான்வழியை பயன்படுத்தி இஸ்ரேல்-யுஏஇ இடையே நேரடி விமானப்போக்குவரத்து

0 1489
சவூதி அரேபியாவின் வான்பகுதி வழியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நேரடி விமான சேவையை துவக்க உள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவின் வான்பகுதி வழியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நேரடி விமான சேவையை துவக்க உள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு ஆசியாவின் அரசியல் நீரோட்டத்தை பாலஸ்தீன பிரச்சனையில் இருந்து திருப்பி, ஈரானுக்கு எதிரான ஒன்றாக மாற்ற அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதை அடுத்து கடந்த 70 ஆண்டுகளில் இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்தும் 3 ஆவது அரபு நாடாக ஐக்கிய அரபு அமீரகம் மாறி உள்ளது.

இரு நாட்டு உறவை வளர்க்க உள்ளதாக இஸ்ரேலும், ஐக்கிய அரபு அமீரகமும் கடந்த வாரம் அறிவித்தன. இஸ்ரேல் விமானங்கள் தனது வான்வழியை பயன்படுத்த கூடாது என தடை விதித்துள்ள சவூதி அரேபியா, இந்தியாவுடனான தனது உறவை தொடர்ந்து டெல்லி-டெல்அவிவ் விமான போக்குவரத்திற்கு வான்வழியை பயன்படுத்த அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments