அனில் அம்பானியின் ஆர்காம் நிறுவனத்தின் சொத்து எங்கே போனது..? உச்சநீதிமன்றம் கேள்வி
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 37 ஆயிரம் கோடியாக இருந்த அனில் அம்பானியின் ஆர்காம் நிறுவனத்தின் நிகர மதிப்பு இப்போது 10 ஆயிரம் கோடியாக குறைந்தது எப்படி என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அரசுக்கு செலுத்த வேண்டிய ஏஜிஆர் எனப்படும் நிலுவைத் தொகையை, திவால் நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்துவது பற்றிய விசாரணையில் நீதிபதிகள் இந்த ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆர்காம்-மிற்கும் எரிக்சன் நிறுவனத்திற்கும் இடையே நடந்த வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பில் ஆர்காம் நிறுவனத்திற்கு 37 ஆயிரம் கோடிக்கான சொத்து உள்ளதாக குறிப்பிடப்பட்டது.
இந்த நிலையில், ஆர்காமின் ஸ்பெக்ட்ரத்தை 2016 முதல் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் பயன்படுத்துவதால், ஆர்காம் வைத்துள்ள நிலுவைத் தொகையான 31 ஆயிரம் கோடியை ஜியோவிடம் இருந்து வசூலிக்க முடியுமா என்றும் விசாரணை நடக்கிறது.
Comments