பிஎம் கேர்ஸ் நிதி வழக்கு - உச்சநீதிமன்றம் தள்ளுபடி..!
பிஎம் கேர்ஸ் நிதிக்கு வரும் நன்கொடைகளை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் அதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொள்ள, கடந்த மார்ச் 28ஆம் தேதி பிஎம் கேர்ஸ் நிதியம் உருவாக்கப்பட்டது. பேரிடர் மேலாண்மை சட்டத்திற்கு புறம்பாக இந்த நிதியம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், அந்த சட்டப்படி பேரிடர் மேலாண்மைக்காக யார் நிதியுதவி வழங்கினாலும் அது தேசிய பேரிடர் மீட்பு நிதிக்கே செல்ல வேண்டும் எனக் கூறி பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அசோக் பூஷன் அமர்வு மனுவை தள்ளுபடி செய்தது. தனிநபர்களும் நிறுவனங்களும் தேசிய பேரிடர் மீட்பு நிதியத்திற்கு தாங்களாக முன்வந்து பங்களிப்பு செய்ய எவ்வித தடையும் இல்லை என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொரோனாவை எதிர்கொள்ள, புதிதாக தேசிய பேரிடர் நிவாரண திட்டத்தை உருவாக்க உத்தரவிட வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
While disposing of the petition, Supreme Court said, no need for fresh national disaster relief plan. https://t.co/zp3A1rejHc
— ANI (@ANI) August 18, 2020
Comments