ரஷ்ய தடுப்பூசி - இந்தியா தொடர்பில் உள்ளது

0 5206

ரஷ்ய அரசு பயன்பாட்டுக்கு பதிவு செய்துள்ள Sputnik V கொரோனா தடுப்பூசியை இந்தியாவுக்கு பெறுவது குறித்து, மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம்,  அதன் உற்பத்தியாளரான காமாலெயா நிறுவனத்துடன் தொடர்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 ஆம் கட்ட சோதனை நடத்தப்படாமல், அவசரத் தேவைக்காக இந்த தடுப்பூசிக்கு கடந்த வாரம் ரஷ்ய சுகாதார அமைச்சகம் அனுமதி வழங்கியது. அதிபர் புதினின் மகள்களில் ஒருவருக்கும் இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், ஒன்று மற்றும் 2 ஆம் கட்ட சோதனைகளில் நல்ல பலன் கிடைத்ததாக அதிபர் புதின் கூறி வருகிறார்.

இந்த நிலையில் 3 ஆம் கட்ட சோதனை ரஷ்யாவில் சுமார் 2000 பேரிடமும், சவூதி அரேபியா மற்றும் சில லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments