அமெரிக்க அதிபர் தேர்தல்-ட்ரம்பை விட ஜோ பிடனுக்கு அதிக மக்கள் ஆதரவு

0 3240
அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரையில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், தற்போதைய அதிபர் ட்ரம்பை விட முன்னணியில் இருப்பதாகக் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரையில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், தற்போதைய அதிபர் ட்ரம்பை விட முன்னணியில் இருப்பதாகக் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

எஸ் எஸ் ஆர் எஸ் என்ற அமைப்புடன் சிஎன்என் இணைந்து தேசிய அளவிலான கருத்துக் கணிப்பை மேற்கொண்டன. இதில் ஜோ பிடனுக்கு 51 விழுக்காடு மக்களும், ட்ரம்புக்கு 42 விழுக்காடு மக்களும் ஆதரவளிப்பதாகத் தெரியவந்துள்ளது.

முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான கருத்துக் கணிப்பில் பிடனுக்கு 50 விழுக்காடு ஆதரவும், ட்ரம்ப்புக்கு 46 விழுக்காடு ஆதரவும் இருப்பது தெரியவந்துள்ளது. கமலா ஹாரிசை துணை அதிபர் வேட்பாளராகத் தேர்வு செய்த பின் பிடனுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாகவும் அந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments