ஜே.இ.இ தேர்வு - நுழைவுச்சீட்டு வெளியீடு
தேசிய அளவில் பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் ஜே.இ.இ முதன்மைத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 1 முதல் 6 வரை நடைபெற உள்ள ஜே.இ.இ மெயின் தேர்வை நாடு முழுவதும் 1,318 மையங்களில், 8,58,273 பேர் எழுத உள்ளனர். இந்நிலையில், தேர்வர்களுக்கான நுழைவுச் சீட்டை வெளியிட்டுள்ள தேசிய தேர்வு முகமை, அதனை https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா பரவல் காரணமாக முன்னெடுக்கப்படும் சுகாதார நடவடிக்கைகளுக்கு, தேர்வர்கள் போதிய ஒத்துழைப்பைத் தர வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
Comments