பழம்பெரும் இசைமேதை பண்டிட் ஜஸ்ராஜ் காலமானார்
பழம்பெரும் இந்திய இசைக் கலைஞர் பண்டிட் ஜஸ்ராஜ் அமெரிக்காவில் காலமானார்.
அவருக்கு வயது 90. அமெரிக்காவின் நியூஜெர்சி பகுதியில் ஓய்வெடுத்து வந்த இவர் இதயக் கோளாறு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஹரியாணா மாநிலத்தில் ஹிசார் மாவட்டத்தில் 1930-ம் ஆண்டு பிறந்த ஜஸ்ராஜ் பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷன் போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.
சுமார் 80 ஆண்டுகளாக இசையோடு வாழ்ந்துவந்த ஜஸ்ராஜ் ஏராளமான கச்சேரிகளை உலகெங்கும் நிகழ்த்தியுள்ளார். இவருடைய பாடல்கள் எண்ணற்ற ஆல்பங்களாக வெளிவந்துள்ளன.
பண்டிட் ஜஸ்ராஜின் மறைவு குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கலைத் தெரிவித்து உள்ளனர். பாடகர்கள் பலருக்கு அவர் தனித்துவமான வழிகாட்டியாக திகழ்ந்ததாக பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Comments