பிரபல இந்தி திரைப்பட இயக்குநர் நிசிகாந்த் காமத் காலமானார்

0 3196
பிரபல இந்தி திரைப்பட இயக்குனர் நிசிகாந்த் காமத் உடல்நலக்குறைவால் காலமானார். 50 வயதான அவர், மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் திருஷ்யம் என்ற பெயரிலும், தமிழில் கமலஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரிலும் வெளியான படத்தின் இந்தி ரீமேக் படமான திருஷ்யத்தை இயக்கியவர் ஆவார்.

இதேபோல் மதாரி உள்ளிட்ட வெற்றி படங்களையும் அவர் இயக்கியுள்ளார். நாள்பட்ட கல்லீரல் நோய் மற்றும் இரண்டாம் நிலை தொற்று பாதிப்புகளால் பாதிக்கப்பட்டிருந்த அவர், காய்ச்சல், சோர்வு காரணமாக ஹைதராபாத்தின் காச்சிபவுலியில் உள்ள மருத்துவமனையில் ஜூலை 31ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் உடல்நிலை பின்னடைவை சந்தித்து வந்தது. பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்ததால் இன்று அவர் காலமானார். அவரது மறைவுக்கு இந்தி திரைப்பட நடிகர் அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments