சவுதி அரேபியாவை குறிவைத்த இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடுவானில் முறியடிப்பு
சவுதி அரேபியாவை இலக்காக வைத்து ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து தாக்கி அழித்ததாக அந்நாட்டு கூட்டுப்படை தெரிவித்துள்ளது.
ஏமன் அரசுக்கும், ஹவுதி போராளிகளுக்கும் இடையில் 2015-ம் ஆண்டு முதல் சண்டை நடைபெற்று வரும் நிலையில், ஏமன் அரசுக்கு சவுதி கூட்டுப்படைகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், சவுதி கூட்டுப்படை நடத்திய தாக்குதலில் ஹவுதி பிராந்தியத்தில் உள்ள தொழிற்சாலையின் எரிவாயு டேங்குகள் சேதமடைந்ததாக ஹவுதி போராளிகளின் தொலைக்காட்சியான அல் மசிரா குற்றஞ்சாட்டியிருந்தது.
அதே சமயம் நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடியதும், கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடியதுமான இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களை முறியடித்ததாக சவுதி கூட்டுப்படை தெரிவித்துள்ளது.
Comments