வீட்டில் மூட்டை மூட்டையாக பணத்துடன் வசித்து வந்த மூதாட்டிகளின் குப்பை வீட்டை கோபுரமாக்கிய காவலர்கள்

0 221401

ஓட்டேரி - சத்தியவாணி முத்து நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி, மகேஸ்வரி ஆகிய இரு சகோதரிகளும் பிளாஸ்டிக் குப்பைகளை பொறுக்கி, அதன்மூலம் பிழைப்பு நடத்தி வந்தனர்.

சாலை ஓரம் வசித்த மூதாட்டிகளிடம் தலைமைச் செயலக காவல் துறை யினர் நடத்திய விசாரணையின்போது, வீட்டுக்குள் மூட்டை மூட்டையாக 2 லட்சம் ரூபாய் அளவிலான 10 ரூபாய் உள்ளிட்ட நோட்டுகள், 4 பிளாஸ்டிக் குடங்களில் சில்லறை காசுகள், 7 சவரன் நகை, 45 கிராம் வெள்ளி மற்றும் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்லாத 500 ரூபாய் , ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும் இருந்தது தெரிய வந்தது.

கையில் காசு இருந்த போதிலும் அதனை பயன்படுத்த முடியாமல் தவித்த மூதாட்டிகளுக்கு காவல்துறையினர் உதவி செய்துள்ளனர். வீட்டில் இருந்த குப்பைகளை, மாநகராட்சி மூலம் அப்புறப்படுத்திய காவல்துறையினர், குடிசையை சுத்தம் செய்து, வண்ண பூச்சு செய்து, மூதாட்டிகள் இருவரையும் மீண்டும் தங்க வைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments